ல்வேறு முறைகளில் மானுட ஜீவிதத்தை முறைப்படுத்தும் ஆற்றலை தன்னகத்தை கொண்ட ஜோதிடவியலில், சாபத்தை சுமக்கும் நட்சத்திரங்களின் வழியில் ஒரு மனிதனின் பிரச்சினைகளை கையாளும் பொழுது மிக எளிதில் அதற்கான தீர்வை எட்டிவிட முடிகிறது.

Advertisment

ss

திருவோணம்

மனோகாரகன் சந்திரனின் திருவோணம், மகரத்தில் தன்னை முழு ஆளுமையுடன் பதிய வைத்துள்ளது. இது சுக்கிரனின் சாபத்தை கொண்ட நட்சத்திரமாகும்.

பெண்மை, நளினம், சுகபோகம் போன்றவற்றை தனதாக்கிக் கொண்ட சுக்கிரன் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்திற்கு தனது சாபத்தை அளித்து பயணிக்கின்றது.

Advertisment

இந்தத் திருவோணம் அமைந்துள்ள மகரத்திற்கு 5 மற்றும் 10-ஆம் பாவகத்திற்கு பொறுப்பேற்றுள்ள சுக்கிரன் இந்த இரண்டு பாவகங்களையும் பதம் பார்த்தே செல்லும்.

மனரீதியான பிரச்சினைகளையும் குழந்தை களின் வழியில் சில கசப்பான நிகழ்வுகளையும், குழந்தை பிறப்பில் தடைகளையும், தரவல்ல நிகழ்வை ஏற்படுத்துகின்றது.

ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவி யாக கருதப்படுவதனால் இவர்களுக்கு மனைவி வழியிலும் சில தொந்தரவுகள் ஏற்படும்.

Advertisment

எல்லா வகையான சுகபோகங்களையும் அள்ளி வழங்கும் இந்த சுக்கிரன் திரு வோணத்திற்கு மற்றும் செல்வங்களின்மூலம் இடர்பாடுகளையும் அளிக்கும்.

உடலில் அமையப்பெற்ற சுக்கிரனின் ஆளுமைக்குரிய மணிபூரக சக்கரம் சார்ந்த உறுப்புகளான கர்ப்பப்பை, சினைப்பை, கருமுட்டை, உயிரணு போன்றவற்றிலும் தொந்தரவுகளைத் தருகின்றது.

அதோடு 10-ஆம் பாவகத்திற்கு தனது ஆளுமை வழங்கும் சாபமானது தொழில் வழியிலும் அல்லல் வழங்குகின்றது. தொழில், பணிபுரியும் இடம் சார்ந்த நபர்களால் பிரச் சினையை வழங்குவதோடு அந்த இடத்தை விட்டு விலகவும் முடியாமல் அலை கழிக்கும் சூழலை மிக எளிதில் அளித்து விடுகின்றது.

வேலூர் மாவட்டம் பிரசன்ன வெங்க டேசப் பெருமாள் திருப்பாற்கடல் இந்த ஆலயத்திற்கு நீங்கள் பிறந்த மாதத்தில் உங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதுக்கு உண்டான எண்ணிக்கையில் தீபமிட்டு, அன்ன தானமும், தண்ணீர் தானமும் அளிப்பதோடு சுக்கிரனின் ஸ்தலமான கஞ்சனூருக்கும் சென்று வருவது வெகுவான சிறப்புகளை உங்களின் வாழ்வில் அள்ளி வழங்கும்.

அதோடு சுக்கிரனின் காரகமான பெண் களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது பல பிரச்சினைகளுக்கு வழிவிட்டு செல்வது போன்ற தன்மையை வழங்கும்.

அவிட்டம்

மகரம் மற்றும் கும்பத்தில் தன்னைப் பிரித்து அளித்துள்ள அவிட்டம் கர்மகாரகன் சனியின் சாபத்தைகொண்ட நட்சத்திரமாகும்.இந்த அவிட்டத்திற்கு சனிபகவான் 1 மற்றும் 2-ஆமிடத்திற்கு பொறுப்பேற்று இருப்பதனால் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சிரமம் மேற்கொள்ளும் சூழலை உருவாக்கிவிடும்.

தங்களின் வாழ்வின் நிகழவிருக்கும் சிறு சிறு நிகழ்வைகூட மற்றவர்களை காட்டிலும் அதீத உழைப்பையும், ஆற்றலையும் செலவிடும் சூழலை அளிக்கும். குறிப்பாக கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத சூழலையும், வருமானம் வரும் வழியில் சில சுனக்கம் மற்றும் குழப்பத்தையும், தாமதத்தையும் அளிக்கும்.

கண், முதுகெலும்பு, மூட்டு, பாதம் சார்ந்த உறுப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் சூழலை வெகுவாக கொடுத்துவிடுகின்றது.

தன் திறமைக்கான ஊதியமோ, அங்கீகாரமோ, மறுக்கப்படும் நிலையை அடிக்கடி சந்திக்கும் சூழலும், சேமிப்பு மற்றும் தொடர் வருவாய்க்கு முற்றுப்புள்ளியும் வைக்கின்றது.

அதோடு கும்ப ராசியில் அமரும் அவிட்டத் தின் பாதங்கள் வெளிநாடு, அசையா சொத்து, தாம்பத்தியம், தூக்கம், தியானம், மெய்ப்பொருள் தேடல், வழியில் பயணிக்க தடையை வழங்குகின்றது.

கும்பகோணம் தாராசுரம் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயத்திற்கு நீங்கள் பிறந்த மாதத் தில் சென்று உங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபம் இடுவதோடு அன்னதானம் மற்றும் தண்ணீர் தானம் வழங்குவதும், சனி பகவானின் ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதும் சிறப்பை வழங்கும்.

சதயம்

கும்பத்தில் தன்னை வேரூன்றி கொள்ள அனுமதித்த சதயம் ராகுவின் நட்சத்திரமாகும். இந்த ராகுவின் நட்சத்திரம் ராகுவின் சாபத்தையே பெற்ற நட்சத்திரம் ஆகும்.

ஒன்பது கிரகங்களில் இருளின் தன்மையை தன்னகத்தே பெரும் அளவுகொண்ட கிரகத்தில் ஒன்று இந்த ராகுவாகும். இவருக்கென்று தனியாக வீடு இல்லாத காரணத்தால் இவர் ஏற்றுள்ள பாவகம் சார்ந்த பிரச்சினைகளையும், பாவகம் சார்ந்த உறவுகளின்மூலம் இணக்கமில்லாத சூழலையும் அளித்து விடுகின்றார்.

உதாரணமாக 10-ஆமிடத்தில் அமரும் ராகு தொழில், கௌரவம் போன்றவற்றிலும் 8-ஆமிடத்தில் அமரும் ராகு அடிக்கடி கண்டங்களையும் வழங்குகின்றது.

ராகுவின் காரகங்களான ஆன்லைன், அதீத பணப்புழக்கம் போன்றவற்றின்மூலம் சில விரும்பத்தகாத நிகழ்வை அனுபவிக்கும் சூழலை அமைத்துத் தருவார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்திற்கு நீங்கள் பிறந்த மாதத்தில் சென்று உங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபமிட்டு அன்னதானம் மற்றும் தண்ணீர் தானம் வழங்குவதோடு ராகுவின் ஸ்தலமான காளஹஸ்தி அல்லது திருப்பாம்புரம் சென்றுவருவது பெரும் சிறப்பினை வழங்கும்.

-அடுத்த இதழில்

(பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி)

செல்: 80563 79988